பாயாசத்திற்கு இந்த ஒரு பொருள் போதும்..!
வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தண்ணீர் அதிகமாகிவிட்டால் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் மாவு இறுகிவிடும்.
காய்கறிகளை வேகவைக்கும்போது தண்ணீரை அளவாக ஊற்ற வேண்டும். காய்கறிகள் வெந்து அப்படியே சுண்டிவிட முடியும் அப்போது தான் அதன் சத்துக்கள் குறையாது.
தோசைக்கல்லில் தோசை ஒட்டிக் கொண்டால் அதை தவிர்க்க ஒரு ஸ்பூன் எண்ணெயுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கல்லில் தேய்த்துவிட்டு பின் ஊற்றினால் நன்றாக தோசை வரும்.
பாயாசத்திற்கு காய்ந்த திராட்சை சேர்ப்பதற்கு பதிலாக பேரீட்சம் பழத்தை நறுக்கி நெய்யில் பொரித்து சேர்த்தல் சுவை அதிகமாகும்.
காரமணியை சற்று நீளமாக நறுக்கி மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்து வெயிலில் காயவைத்து பின் பொரித்து சாப்பிட ருசியாக மொறுமொறுவென இருக்கும்.
சீரகம், காய்ந்த மிளகாய், தனியா, வெங்காயம், பொட்டுக்கடலை ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து காய்கறி பொரியலில் சேர்க்க ருசியாக இருக்கும்.
ஊத்தப்பம் செய்யும்போது அதன் நடுவே ஒரு ஓட்டைபோட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்தால் ரொம்ப ருசியாக் இருக்கும்.
பாகற்காயில் மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஊறவைத்து சமைத்தால் கசப்பு தெரியாது.