ஆம்லெட் செய்யும்போது இப்படி செய்ங்க..! சூப்பர் டிப்ஸ்..!
குருமாவில் தேங்காய்க்கு பதிலாக சர்க்கரைவள்ளி கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.
முட்டைகோஸை தண்ணீரில் வேகவைப்பதை விட இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கும்போது அதன் சத்துக்கள் வீணாகாது.
ஆம்லெட் செய்யும்போது முட்டையில் சிறிது வெண்ணெய் சேர்த்து அடித்து ஆம்லெட் செய்தால் சுவையாக இருக்கும்.
ரவா தோசையில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.
ஆப்பம் செய்யும்போது சிறிது கோதுமை மாவு சேர்த்து செய்தால் சீக்கிரம் காய்ந்து போகாமல் இருக்கும்.
உடைத்த தேங்காய் காய்ந்து போய்விட்டால் அதில் கொஞ்சம் பால் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து பிறகு பார்த்தால் புதிய தேங்காய் போல ஆகிவிடும்.
பூரிக்கு மாவு பிசையும்போது அதில் ஒரு ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி பிசைந்து பூரி சுட்டால் அதிகம் எண்ணெய் குடிக்காது.
தேங்காய் நீர் இருந்தால் குருமா செய்து இறக்கும்போது சேர்த்தால் குருமா ருசியாக இருக்கும்.
முட்டை வேகவைக்கும்போது நீரில் சிறிது வினிகர் சேர்த்து வேகவைக்க ஓடு உடைந்து விரிசல் விழந்து அதன் கரு கலையாது.
தக்காளி சட்னியில் சிறிது எள் சேர்த்து அரைக்க அதன் சுவை கூடும்.