இந்த 5 உணவுகள் சாப்பிட்டா , சிறுநீரகம் பிரச்சனை இருக்காது..!
நாம் சாப்பிடும் உணவுகள் , குடிக்கும் பானம் என அனைத்தும் , உடல் ஆரோக்கியத்தில் தொடர்புடையது. நம் உடல் உறுப்புக்கள் அதன் செயல்பாடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் உண்ணும் உணவுகளில் இருந்துதான் கிடைக்கிறது.
நம் உணவுகளை பொறுத்துதான், உடல் ஆரோக்கியமாக இருக்கும் ஆரோக்கியமில்லாத உணவுகள், முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும். அத்தகைய ஒரு உறுப்பு சிறுநீரகம் ஆகும். சிறுநீரகம் உடலின் வளர்சிதை மாற்றக் கழிவுகளை சுரப்பதற்கும் இரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
1. தண்ணீர் என்பது சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும், நச்சுக்களை நீக்கும். இது உணவுகளின் பட்டியலில் கணக்கிடப்படுவதில்லை. உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் .நீரேற்றமாக இருந்தால் , நச்சுகள் மற்றும் சிறுநீரகங்களை இயற்கையாக சரிசெய்யும் .
2. குருதிநெல்லி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது . அவற்றில் ஒன்று கிரான்பெர்ரி. மருத்துவர்களின் பரிந்துரைப்படி சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவும். குருதிநெல்லி சாறு சாப்பிட்டால், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் அழுத்தத்தை கொடுக்கும் . அழுத்தம் கொடுத்தால் , சிறுநீரகத்தில் இருந்து கழிவுகள் உடனே வெளியேறும்.
![](https://scontent.fmaa12-1.fna.fbcdn.net/v/t1.18169-9/10603246_309716805883219_1631109553430864247_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=c2f564&_nc_ohc=mwkdJdChKu4AX_20sXR&_nc_ht=scontent.fmaa12-1.fna&oh=00_AfDeEBfdPonVwENAqNyqFpWUGEmvGrDfs0V1oiCaUEQ2gA&oe=656D9620)
3. மீன்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் ஓர் முக்கியமான ஊட்டச்சத்து ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கிடைக்கிறது. தேசிய சிறுநீரக அறக்கட்டளை ஆய்வின்படி, ஒமேகா -3 கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி சிறுநீரகத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
4. சிட்ரஸ் பழங்கள் பழங்களில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்திருக்கும் . இந்த சிட்ரஸ் பழங்களை உட்கொள்வது போதுமான நீ ரேற்றத்தை கொடுக்கும். இந்த பழங்களில் அதிகளவு சிட்ரேட் இருப்பதால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கும். நம் சிறுநீரின் அமிலத்தன்மையை குறைத்து, சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும்.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2020/03/23/157074-frute.jpg)
5. வெள்ளரிக்காயில் அதிக நீர்சத்து இருக்கும் . வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டால், நீரேற்றமாக இருக்கும். இது சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் சிறந்த சிறுநீரக செயல்பாட்டை கொடுக்கிறது.
நம் வீட்டில் உள்ள காய்கறிகளை வைத்தே நமது உடல் ஆரோக்கியத்தை பெறலாம். போதை பொருட்கள் உட்கொள்ளாமல் இருந்தால் எந்த வித பிரச்னையும் இன்றி வாழலாம்.
-நிரோஷா மணிகண்டன்
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..