பழைய சோற்றின் அற்புதங்கள்..!
வேறு எந்த உணவு பொருட்களிலும் கிடைக்காத அளவு வைட்டமின் பி6,பி12 சத்துக்கள் பழைய சோற்றில் அதிகமாக நிறைந்துள்ளது.
பழைய சோற்றில் லட்சக்கணக்கில் நல்ல பாக்டீரியாக்கள் நிரம்பி உள்ளதால் அதனை உட்கொள்ளும்போது செரிமான கோளாறுகள் அனைத்தும் நீங்கி செரிமான மண்டலம் சீராக செயல்படும்.
பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருப்பதால் இது உடலை நோய் தொற்று கிருமிகளிடமிருந்து பாதுகாக்கிறது.
காலை உணவாக இதனை சாப்பிடும்போது வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கி வயிறு ஆரோக்கியமாக இருக்கும்.
பழைய சோறு உடல் உஷ்ணத்தை நீக்குகிறது.
உடலில் ஏற்ப்படும் ஒவ்வாமை பிரச்சனைகளை தீர்க்க வல்லது.
இரத்த அழுத்தம் சீராக்குவதுடன்,உயர் ரத்த அழுத்தத்தையும் சரிச்செய்கிறது.
