மழைக்காலத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் முன் கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க..!
மழைக்காலங்களில் அதிகபடியான ஈரப்பதம், பூஞ்சை, மாசு ஆகியவற்றால் தலைமுடி உதிர்தல், அரிப்பு, பொடுகு ஆகிய பிரச்சனைகளை உண்டாக்கும். இதற்கு ஒரே தீர்வு தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது மட்டுமே ஆனால் மழைக்காலங்களில் தலைக்கு எத்தனை முறை எண்ணெய் வைக்க வேண்டும் என்பது ஒரு சந்தேகமாகவே இருக்கும்.
முடிக்கு எண்ணெய் வைப்பதின் நன்மைகள்:
முடி வேர்களை பலமாக்குதல்: தலைக்கு எண்ணெய் வைப்பதால் முடியின் வேர்கால்களை பலப்படுத்தி முடி உதிர்வு குறைந்து, புதிய முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
உச்சந்தலையை ஈரப்பதமாக்குதல்: மழைக்காலங்களில் மண்டை மிகவும் வறண்டுபோகும், அவற்றை சரிசெய்ய அடிக்கடி எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதினால் அரிப்பு மற்றும் பொடுகு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது: தலையில் செய்யும் எண்ணெய் மசாஜ் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மேலும் மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்தை தருகிறது.
முடியை மென்மையாக்குதல்: எண்ணெய் மசாஜ் செய்யும்போது தலைமுடி மென்மையாக வைக்கிறது.
மழைக்காலங்களில் எத்தனை நாட்களுக்கு தலையில் எண்ணெய் வைக்கலாம்..
மழைக்காலங்களில் முடிக்கு பொதுவாக 2 முதல் 3 முறை எண்ணெய் தேய்த்து சிறப்பாக இருக்கும்.
- பொதுவாக மிகவும் வறண்ட தலைமுடியை உடையவர்களுக்கு வாரத்தில் 3 முறை எண்ணெய் வைப்பது சிறந்தது.
- தலையில் எண்ணெய் பசை உடையவர்களுக்கு வாரத்தில் 2 முறை எண்ணெய் தேய்க்கலாம்.
- தலையில் பொடுகு பிரச்சனை கொண்டிருப்பவர்கள் வேப்ப எண்ணெய் மற்றும் தேயிலை எண்ணெயை தலைக்கு பயன்படுத்தலாம்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)