அடுத்த முறை இதை ட்ரை பண்ணி பாருங்க..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- தயிருடன் மிளகாய் பொடி சேர்த்து கலந்து இட்லி அல்லது தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- குக்கரின் உள்ளே கறை படிந்திருந்தால் பெரிய வெங்காயம் ஒன்று வைத்து கறை உள்ள இடத்தில் தேய்க்க கறைகள் நீங்கிவிடும்.
- வெண்ணெய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க அதன் மேல் உப்பு தூவி விடலாம்.
- வெண்டைக்காய் காம்பு மற்றும் தலைபகுதியை வெட்டி வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றி விடாமல் இருக்கும்.
- சர்க்கரை பொங்கலில் மில்க்மெய்ட் சேர்த்து செய்ய நன்றாக சுவையாக இருக்கும்.
- சேனைக்கிழங்கை புளிதண்ணீரில் வேகவைக்க நாக்கில் நமைச்சல் இருக்காது.
- சப்பாத்தி மாவில் பால் விட்டு பிசைந்து சுட்டால் சப்பாத்தி நன்றாக உப்பி வரும்.
- ரொட்டி காய்ந்து போய்விட்டால் இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவிகாட்டினால் நன்றாக புதிய ரொட்டி போல ஆகிவிடும்.
- முட்டையின் மேல் எண்ணெய் தடவி வைக்க நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
- பாகு காய்ச்சும்போது பதம் வந்ததும் எலுமிச்சை சாறு விட்டால் பாகு முற்றாது.
- பயித்தம் பருப்பு கீரை கூட்டு செய்யும்போது ஒரு கப் பால் விட்டால் வாசனையாக இருக்கும்.
- வத்தல் குழம்பில் கடைசியாக சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவை அதிகமாகும்.
- பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் பழுக்காமல் இருக்கும்.
- மண்ணெண்ணெய் வாசனை போக தயிர் வைத்து கழுவினால் அந்த எண்ணெய் வாசனை போய்விடும்.