வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது..?
இப்போதெல்லாம் தோனி ஆட வந்தால் மகிழ்ச்சியோடு பதற்றமும் தொற்றிக் கொள்கிறது, அவுட் ஆகி விடக்கூடாதே என்று.
உச்சியில் இருக்கும் போதே உலக கிரிக்கெட்டிலிருந்து பெருமையோடும் பெருமிதத்தோடும் வெளியேறியவர் தோனி. (அய்.பி.எல்லில் சென்னை இரசிகர்களுக்கு பரிசளிக்கும் வகையில் இவ்வாண்டு ஆடுகிறார்.)
அந்த காலத்தில் சில வீரர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நாட்கள் ஆடி இறுதியில் அசிங்கப்பட்டு வெளியேறினார்கள். “அவர்கள் எப்போது ரிட்டயர் ஆக வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள்” என்றெல்லாம் சொல்லி கிரிக்கெட் வாரியம் தன்னை அசிங்கப்படுத்திக் கொண்டது வரலாறு.
ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் கடைசி சில ஓவர்களில் பல பந்துகளைச் சரியாக அடிக்காமல் சிஎஸ்கே தலைவர் கெய்க்வாட் வீணாக்கி இருப்பார். அதுபோன்ற டெத் ஓவர்களில், ஒவ்வொரு பந்தும் முக்கியம்.
எவ்வளவு அதிகமாக ஓட்டங்கள் சேர்க்க முடியுமோ சேர்க்க வேண்டும். இல்லையென்றால் விலகி அடுத்த ஆட்டக்காருக்கு வழி கொடுக்க வேண்டும். இதுதான் இன்றைய டீ 20 ஆட்டத்தின் நியதி.
அதாவது ஓரிரு பந்துக்குக் கூட பிரயோஜனம் இல்லை என்றால் இடத்தை காலி பண்ணிக் கிளம்புங்கள். வருங்காலத்தில், ஒருவர் ஒருநாள் கூட யாருக்கும் பயனில்லை என்றால் இவ்வுலகை விட்டுப் புறப்பட்டுச் செல்லுங்கள் என வழி வகுக்குக்கபடுமோ.
வகுத்தால் சரிதானே. வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது..? என்று தான் பலரின் சிந்தனை இருக்கும்
-வீர பெருமாள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..