ஆட்ட நாயகன் ஆன ரியான் பராக்..!! டெல்லிக்கு அவுட்..!! ராஜஸ்தான் இனி..?
தற்போதைய ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி நேற்று ஆடியது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை (பந்து வீச்சு ) தேர்வு செய்தது.
அதனால் ராஜஸ்தான் அணியினர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களத்தில் இறங்கினார்கள். அதில் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கு வெளியேற அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களிலே வெளியேறினார். இதனால் தோற்றுவிடம் என்ற எண்ணத்தில் ராஜஸ்தான் அணியினர் தள்ளப்பட்டனர்.
இதற்கு முன் ஆடிய ஆட்டகர் தான் அப்படி என நினைத்தால் ஜோஸ் பட்லர் 11 ரன்கள் அடித்து, குல்தீப் யாதவ் வீசிய பந்தில் அவுட் ஆகிவிட்டார்.., இதனால், 36 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற இடத்திற்கு தள்ளப்பட்டனர். இதனையடுத்து களத்தில் இறங்கிய ரியான் பராக் – அஷ்வினுடன் கைகோர்த்து சிறப்பாக ஆடி மைதானத்தையே அதிர வைத்தார்.
இதில், அஷ்வின் 29 ரன்களில் வெளியேறினாலும் எதிரில் ஆடிய ரியான் பராக், டெல்லி அணியின் பந்துவீச்சை தும்சம் செய்தார். 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உட்பட 85 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி.
பின்னர் 186 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தில் இறங்கிய டெல்லி கேப்பிடல் அணியின் ஓப்பணிங் பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர்- மிட்செல் மார்ஷ் ஆட்டத்தில் இறங்கி 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார்கள்.
அதனை தொடர்ந்து ரிக்கி பூய் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் ரிஷப் பண்ட்டு மற்றும் வார்னர், 49 ரன்களில் வெளியேறினார்கள்.
தொடர்ந்து ரிஷப் பண்ட் 28 ரன், அபிஷேக் போரல் 9 ரன்கள், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அக்சர் படேல் ஜோடி இணைந்து 51 ரன்கள் எடுத்தனர். இருப்பினும், ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சலில் ஆடிய டெல்லி இலக்கை எட்ட முடியமால் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து தோல்வியுற்றனர்.
எனவே 12 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை பீட் செய்து “ராஜஸ்தான் ராயல்ஸ்” வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு நடைபெற உள்ள 10வது லீக் போட்டியில் ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாட போகிறார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..