குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதை எப்படி கண்டறிவது..?
குழந்தை பிறந்த பின் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வருவதற்கு முன், மருத்துவரிடம் குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏதாவது, உள்ளதா என தெரிந்துக்கொள்ள வேண்டும்.
* குழந்தையை சூரிய ஒளியில் காட்டியோ அல்லது, வெண்மை ஒளியின் கீழேயோ அவர்களின் உடையை நீக்கி குழந்தையின் உடல் மஞ்சள் நிறத்தில் உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.
* ஆள் காட்டி விரலை குழந்தையின் சருமத்தில் அழுத்தும், பொழுது உடல் மஞ்சள் நிறத்தில் மாறுகிறதா என பார்க்க வேண்டும். மஞ்சள் நிறம் மற்றும் எலும்பிச்சைப்பழ நிறத்தில் நிறமாற்றம் ஏற்படுகிறதா என பார்க்க வேண்டும்.
* முகம், பாதம் கீழ் வயிறு மற்றும் தொடை பகுதியில் மஞ்சள் நிறத்தில் இருந்தால், மஞ்சள்காமாலை ரத்தத்தில் உள்ளது என அர்த்தம்.
* அதுவே மஞ்சள் நிறமற்ற ஆரஞ்சு நிறத்தில் காணப்பட்டால், மார்பின் மேல்பகுதி, வயிற்றின் கீழ்பகுதி, உள்ளங்கை மற்றும் பாதங்களில் இருந்தால். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தை பிறந்த 4 நாட்கள் கழித்து தான் இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும். இதை சரியாக கவனிக்காமல் விட்டால். குழந்தையின் மூளை வரை பாதிக்கும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
Discussion about this post