இந்த மழைக்கு ஏற்ற தூதுவளை கீரை குழம்பு ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
தூதுவளை 2 கைப்பிடி
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
மல்லித்தூள் 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் 15
பூண்டு உரித்தது 15
புளி நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையானது
எண்ணெய் தேவையானது
செய்முறை:
தூதுவளை கீரையை நன்றாக நீரில் அலசி ஒரு மிக்ஸியில் போட்டு லேசாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
புளியை நீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ரி சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், பொஓண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் பொடித்த தூதுவளை கீரை மற்றும் மசாலா அனைத்தையும் சேர்த்து வதக்கி பிறகு புளிக்கரைசல் மற்றும் உப்பு கலந்து கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதித்து குழம்பு சுண்டி எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான தூதுவளை கீரை குழம்பு தயார்.
இந்த குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இந்த மழைக்கு சளி தொந்தரவுகளை தவிர்க்க இதுமாதிரி குழம்பு வைத்து சாப்பிடுங்க.