காய்கறி போட்ட வெஜ் குருமா..!
வெஜ் குருமா என்பது காய்கறிகள் அதிகம் நிறைந்த ஒரு கலவையாகும். காய்கறிகளை சாப்பிடுவதினால் நமக்கு செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவியாக இருக்கிறது.
இதுமாதிரி குருமா நீங்கள் வீட்டில் செய்யும்போது இன்னும் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
தேவையான பொருட்கள்:
- எண்ணெய்
- இரண்டு பிரியாணி இலை
- ஒரு பட்டை
- மூன்று ஏலக்காய்
- மூன்று கிராம்பு
- ஒரு டீஸ்பூன் சோம்பு
- ஒரு பெரிய வெங்காயம்
- இஞ்சி பூண்டு விழுது
- ஒரு டீஸ்பூன் சீரகத்தூள்
- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
- மஞ்சள் தூள்
- இரண்டு தக்காளி
- பீன்ஸ்
- கேரட்
- பச்சை பட்டாணி
- காலிஃப்ளவர்
- உருளைக்கிழங்கு
- உப்பு
- கொத்தமல்லி இலை
அரைக்க
- துருவிய தேங்காய்
- கசகசா
- பொட்டுக்கடலை
- முந்திரிப்பருப்பு
செய்முறை:
ADVERTISEMENT
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும், பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.
- பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அதில் சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறிவிட வேண்டும்.
- பின் உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி, பீன்ஸ். காலிஃபிளவர் ஆகியவற்றை சேர்த்து கலந்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கசகசா, பொட்டுக்கடலை, முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
- இதனை குழம்பில் சேர்த்து கலந்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் வெஜ் குருமா தயார். இதனை சாதம், இட்லி, தோசை,சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் சூப்பராக இருக்கும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.