மூதாட்டியின் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்ற வட மாநில சிறுவன்.. போலீசில் சிக்கியது எப்படி..!
மூதாட்டியிடம் 10 பவுன் செயினை பறித்துச் சென்ற 16 வயது சிறுவனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூன்று மணி நேரத்தில் சிறுவனை கைது செய்த போலீசார்.
கோவை மாவட்டம் பன்னிமடை அருகே ஆர்.ஆர்.அவென்யூ குடியிருப்பு பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவசங்கர் -பார்வதி 64, தம்பதியினர். இந்த வயதான தம்பதி அக்குடியிருப்புக்கு புதிதாக குடிவந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இவர்களது வீட்டீல் 16 வயது வட மாநில சிறுவன் ஒருவன் வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம் போல் வேலைக்கு வந்த சிறுவன் வீட்டின் வெளியில் யாருமில்லாததை அறிந்து கொண்டு மூதாட்டியின் கழுத்தில் இருந்த பத்து பவுன் தாலி கொடியை பறித்து தப்பி சென்றுள்ளான்.
பின்னர், மூதாட்டி மற்றும் அவரது கணவர் தடாகம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் சிறுவன் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை அமைத்த போலீசார் மூன்று மணி நேரத்தில் சிறுவனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 பவுன் தாலி கொடியையும் கைப்பற்றியுள்ளனர்.
இதுபோன்ற முன் அறிமுகம் இல்லாத வட மாநில நபர்களை வேலைக்கு அமர்த்துவதை எவ்வளவு ஆபத்தானது என்பதை பற்றியும் அவ்வாறு வைக்கும் பட்சத்தில் அவர்களின் முறையான ஆவணங்களை பெற்று வைக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.