காரசாரமான காலிஃபிளவர் பெப்பர் ஃபிரை..!
தேவையான பொருட்கள்:
பொறிக்க
- அரை கப் மைதா மாவு
- கால் கப் சோள மாவு
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- எண்ணெய்
- மஞ்சத்தூள்
- உப்பு
- காலிஃப்ளவர்
அரைக்க
- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு
- ஒரு டீஸ்பூன் சீரகம்
- கால் டீஸ்பூன் சோம்பு
ஃப்ரை செய்ய
- எண்ணெய்
- ஒரு பிரியாணி இலை
- இரண்டு பட்டை
- மூன்று கிராம்பு
- இரண்டு ஏலக்காய்
- இரண்டு வளமிளகாய்
- இஞ்சி பூண்டு விழுது
- கருவேப்பிலை
- இரண்டு பெரிய வெங்காயம்
- ஒரு டீஸ்பூன் மல்லித்தூள்
- உப்பு
- கொத்தமல்லி இலை
- அரைத்து வைத்த மசாலா
- பொறித்து வைத்த காலிபிளவர்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் சூடான நீர் வைத்து அதில் காலிஃபிளவர் வைத்து சிறிது நேரம் வைத்திருந்து பின் தனியே வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்துக் கொள்ள வேண்டும்.
- பின் இந்த மாவில் காலிஃபிளவரை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள காலிஃபிளவர் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
- பின் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். லேசாக தண்ணீர் தெளித்து காலிஃபிளவரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
- அடுத்ததாக அரைத்த மசாலாவை சேர்த்து கிளறிவிட்டு சிறிது நேரம் வைத்திருந்து கடைசியாக கொத்தமல்லி இலிய தூவி இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் காரசாரமான காலிஃபிளவர் பெப்பர் ஃபிரை தயார்.