வீட்டில் காளான் இருந்தால் போதும் டக்குனு இந்த காளான் 65 செய்யலாம்..!
குழந்தைகளுக்கு ஈவினிங்கில் என்ன ஸ்நாக்ஸ் செய்யலாம்னு யோசனையாக இருக்கா கவலை வேண்டாம் காளான் மட்டும் போதும் நான் சொல்ற மாதிரி செய்ங்க ரொம்ப ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு
- ஒன்றரை டேபிள் ஸ்பூன் சோள மாவு
- ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- ஒரு டீஸ்பூன் மல்லித்தூள்
- அரை டீஸ்பூன் மிளகுத்தூள்
- ஒரு டீஸ்பூன் கரம் மசாலா
- உப்பு
- ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 200 கிராம் காளான்
- எண்ணெய்
- ஊற வைத்த காளான்
- இரண்டு பச்சை மிளகாய்
- எலுமிச்சை சாறு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, சிறிது உப்பு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
- காளானை நன்றாக சுத்தம் செய்து பின் காளானை இரண்டாக நறுக்கி தயாரித்த மாவில் கலந்து பிரட்டி விட்டு அரை மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
- அரை மணி நேரம் கழித்து ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காளானை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- அதே சூடான எண்ணெயில் பச்சை மிளகாயை சேர்த்து பொரித்து அதனை காளான் 65 மேலே போடவும்.
- அவ்வளவுதான் காளான் 65 தயார்.இதனை பச்சை மிளகாயுடன் சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.