உருளைக்கிழங்கு இருக்கா..? உடனே இத செய்ங்க..!
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு – 1
இட்லி மாவு – 1 கப்
வர மிளகாய் – 3
பூண்டு – 4
சோம்பு – 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
அரிசி மாவு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கு ஏற்ப
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
காய்ந்த மிளகாயை லேசாக சூடான நீரில் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கின் தோலை சீவி நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நீரி ஊற்றி உருளைக்கிழங்கை சேர்த்து உப்பு சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைக்க வேண்டும்.
பின் நீரில் இருந்து உருளைக்கிழங்கை எடுத்து ஆற வைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த மிளகாய், பூண்டு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவினை எடுத்துக் கொண்டு அதில் அரைத்த கலவையை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, உப்பு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
உருளைக்கிழங்கை கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் டேஸ்டான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார்.