கோட் திரைப்படத்தின் குட்டி ரிவியுவ்…!! அடுத்த தளபதி இவரா..?
தளபதி விஜயின் 68 வது திரைப்படமான தி கோட் திரைப்படம் 400 கோடி பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ள இந்த படத்தில் பிரஷாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காந்திருந்த அனைவருக்கும் இந்த படம் நேற்று விருந்தளித்தது. அதாவது நேற்று திரையரங்கில் பிரமாண்டமாக வெளியானது.
ரசிகர்கள் கொண்டாட்டம்:
விஜய் திரைப்படங்கள் என்றாலே அவரது ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என திருவிழா போல் கொண்டாடுவார்கள். அதிலும் இந்த படம் விஜய் நடிக்கும் கடைசி இரண்டு படங்களில் ஒன்று என்பதால் அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் என் பலருக்கு அன்னதானம், இலவச டிக்கெட் என்று பல்வேறு உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
கோட் விமர்சனம்:
பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
தளபதி டூ இளையதளபதி:
தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் தந்தை மகன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி உள்ளார். அதிலும் மகன் கதாபாத்திரம் வேற லெவலில் நடித்துள்ளார். கலாட்டா, காமெடி, ஆக்சன், எமோஷன் நகைச்சுவை என மகன் கதாபாத்திரத்தில் இளையதளபதியாக மிரட்டியுள்ளார்.
கேமியோக்கள்:
சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோரின் கேமியோ ரோல் திரையரங்கில் கைத்தட்டளை அள்ளியுள்ளது. அதிலும் கேப்டன் விஜயகாந்தின் விஜயகாந்தின் ஏஐ கேமியோவின் சீக்ரெட் ட்விஸ்ட் மூலமாகத்தான் படமே தொடங்குகிறது.
அடுத்த தளபதி யார்..?
கோட் திரைப்படத்தின் வசூல் சாதனையை விட தற்போது அடுத்த தளபதி யார் என்பது தான் பலரும் பேசும் ஒன்றாக மாறிவிட்டது.. அதே சமயம் கோட் படத்தின் கடைசியில் சிவகார்த்திகேயன் வருவதால் இவர் தான் அடுத்த தளபதியா என்று கேள்வியும் எழுந்துள்ளது..
ரசிகர்கள் கருத்து :
எங்கள் தளபதி விஜய் அண்ணா படம் நடித்தாலும் நடிக்காவிட்டாலும்.. என்று ஒரே தளபதி அவர் எங்கள் விஜய் அண்ணா மட்டுமே…, சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு ஸ்டைல் உள்ளது.. அதை வைத்து அவருக்கு பெயர் கொடுங்கள்.. என கருத்து பதிவிட்டு வருகின்றனர்..