இட்லி தோசைக்கான சைடு டிஷ் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 3
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 4
உப்பு -தேவையான அளவு
பச்சைப் பட்டாணி – சிறிதளவு
எண்ணெய் – கால் கப்
பட்டை – 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை சிறிது
அரைக்க:
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 6 பல்
மிளகாய்தூள் – இரண்டரை டீஸ்பூன்
தனியாதூள் – அரை டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி பெரியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய் மற்றும் பொட்டுகடலை மட்டும் தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் தக்காளி போட்டு வதக்கி பின் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து உருளைக்கிழங்கு வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்து சுண்டியதும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.