மாங்காய் ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா..?
தேவையான பொருட்கள்:
- புளிப்பான கிளிமூக்கு மாங்காய் 1/4 பகுதி
- துவரம் பருப்பு 4 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் 1 டீ ஸ்பூன்
- உப்பு தேவையானது
- அரைக்க:- மிளகு 1 ஸ்பூன்
- சீரகம் 1 ஸ்பூன்
- பெரிய பல் பூண்டு 5
- பச்சை மிளகாய் 2
- தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் 3
- பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை 1 சிறிது
- கொத்தமல்லி இலை சிறிது
- நெய் 2 ஸ்பூன்
- எண்ணெய் 1 ஸ்பூன்
- தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
முதலில் மாங்காயின் தோலை சீவி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் சேர்த்து அதில் இந்த நறுக்கிய மாங்காய் துண்டுகளை போட்டு ஐந்து நிமிடங்களுக்கு வேகவைத்து பின் நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக குழைய குழைய வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸியில் வேகவைத்த மாங்காயுடன் 2 ஸ்பூன் வேகவைத்த துவரம் பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து அதில் கொரகொரப்பாக அரைத்தவற்றை சேர்த்து, உப்பு போட்டு அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அரைத்த மாங்காய் விழுது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
மீதம் இருக்கும் துவரம் பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
பின் அதில் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
கடைசியாக ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் மாங்காய் ரசம் தயார்.