அன்னாசிப்பழ மோர்க்குழம்பு..!
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அன்னாசி பழத்தின் துண்டுகளை சேர்த்து உப்பு போட்டு வதக்கி பின் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
ஒரு மிக்சியில் துவரம் பருப்பு, அரிசி, சீரகம், மிளகு, தேங்காய் சேர்த்து அரைத்து பின் அத்துடன் தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த கலவையை கொதிக்கும் ஃபேனில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
ஒரு வாணலில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்றாக பொங்கி நுரை வந்ததும் இறக்கி விட வேண்டும்.
அவ்வளவுதான் சூப்பரான டேஸ்டில் அன்னாசிப்பழ மோர்க்குழம்பு தயார்.