“இந்தி திணிப்பு கூடாது..” அரசியலுக்கு வரும் ஆசையில் கீர்த்தி சுரேஷ்..!!
இந்தி திணிப்பை மையமாக கொண்டு அதை நகைச்சுவை திரைப்படமாக மாற்றி எடுக்கப்பட்டுள்ள படம் தான் “ரகு தாத்தா”. கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த “ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம்” தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.. இதில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்திலும், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை திரைப்படம் என சொல்லப்பட்டாலும், படத்தில் முழுக்க முழுக்க இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பு, அதை எதிர்க்கும் வசனங்களும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது., வருகின்ற ஆகஸ்டு 15-ம் தேதி ரகு தாத்தா திரைப்படம் திரையரங்கில் (World Wide Release ) வெளியாகவுள்ளது.
இந்த ரகுதாத்தா திரைப்படதிற்கு முன்பு மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், “எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் ஆசை வரலாம்” ஆனால் இப்போது அந்த ஆசையில்லை., “ரகு தாத்தா படம் இந்தி திணிப்பு தொடர்பான ஒரு படம், தமிழ்நாட்டில் மட்டும் தான் இதுபோன்ற படத்தைப் பற்றி பேச முடியும்.
இந்திக்கு எதிராக பேசிவிட்டு இந்தியில் நடிப்பதாக பலரும் விமர்சனங்கள் செய்ய தொடங்கினார்கள்.. அவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன்.
நான் இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பு கூடாது என்ற கருத்தில் கொண்டு பேசுகிறேன்.., மேலும் “அரசியலுக்கு வரும் ஆசை வருங்காலத்தில் வரலாம்” அப்படி வந்தால் நான் யாருடன் இணைவேன் என்று ரசிகர்ளுக்கு தெரியும் என கீர்த்தி சுரேஷ் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..