சாமை இடியாப்பம்..!
தேவையான பொருட்கள்:
சாமை மாவு 1 கப்
அரிசி மாவு அரை கப்
தண்ணீர் 1 கப்
நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
அரிசி மாவு,சாமை மாவு,தண்ணீர்,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து கரைத்த மாவை அதில் சேர்த்து நன்றாக கிளறவும்.
மாவு ஒட்டாமல் வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி மூடி வைக்கவும். சிறிது கைப்பொறுக்கும் சூடிற்கு வந்ததும் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி இடியாப்ப குழாயில் சேர்த்து பிழிந்து 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சாமை இடியாப்பம் தயார்.