ஆளுநர் ஆர்.என்.ரவி தவறான போக்கில் போகிறார்..!! மதிமுக வைகோ குற்றச்சாட்டு
மாநில அரசோடு நிழல் யுத்தம் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தவறான போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேட்டுகொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் அரசியல் தலைவருமான அய்யா என்.சங்கரய்யா அவர்களுக்கு, மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் வழங்க முடிவு செய்திருந்த கோப்பில், ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுத்த செய்தி அனைவரின் பலத்த கண்டனத்திற்குறியது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு என்.சங்கரய்யா அவர்களுக்கு டாக்டர் வழங்க அறிவித்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு எதிராக நடந்துகொள்வது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு என குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளையும், அரசின் முற்போக்கான திட்டங்களையும் முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்தி, மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும்..
பல கோடி தமிழர்கள் விருப்பத்தை குடியரசுத் தவைரிடம் மதிமுக முறையிட்டுள்ளதாக தெரிவித்துள்ள வைகோ இதன் பின்னரும் ஆர்.என்.ரவி தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல் தொடர்வது வன்மையான கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி இனியாவது தனது தவறான போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அதன் முதல் நடவடிக்கையாக மூத்த தலைவர் சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.
Discussion about this post