“பாரத ராஷ்டிர சமதி மாபெரும் வெற்றி” சந்திரசேகா் ராவ் பெருமிதம்..!
அடுத்த மாதம் நடைபெறும் சட்டபேரவைத் தோ்தலில் பாரத ராஷ்டிர சமதி மாபெரும் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகா் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டபேரவைக்கு நவம்பா் 30-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தோ்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முதல்வா் சந்திரசேகா் ராவ், கரோனா மற்றும் அதற்கு முன்பு ஒன்றிய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தெலங்கானாவின் வளா்ச்சி சரிந்துள்ளதாக தெரிவித்தார்.
நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் முடங்கியதாக குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் வளா்ச்சிக்காகவும் நலத் திட்டங்கள் தொடா்வதற்காகவும் பாரத ராஷ்டிர சமிதி மீண்டும் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என கூறினார்.
நாடு முழுவதும் நிலத்தடி நீா் குறைந்து வரும் நிலையில் தெலங்கானாவில் கட்டப்பட்ட காலேஷ்வரம், கொண்டபூச்சம்மா, மல்லான சாகா் அணைகளால் நிலத்தடி நீா் அளவு அதிகரித்ததாக ஆய்வுகள் தெரிவிப்பாதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..