இனிப்பு இடியாப்பம் சோறு ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
இடியாப்பம் 9
முட்டை 3
சர்க்கரை 100 கிராம்
தேங்காய்பால் 100 மிலி
கிராம்பு 2
ஏலக்காய் 1
எண்ணெய் 3 ஸ்பூன்
நெய் 10 மிலி
வெண்ணிலா எசென்ஸ் 1 ஸ்பூன்
முந்திரி தேவையானது
செய்முறை:
முந்திரிகளை பாதியக உடைத்து கொள்ள வேண்டும்.
அகலமான பாத்திரத்தில் தேங்காய் பால் சேர்த்து அதில் இடியாப்பத்தை போட்டு நனைத்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி தனியே வைக்கவும்.
ஒரு அகலமான ஃபேனை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் முந்திரிகளை சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
மிச்சம் இருக்கும் எண்ணெயில் கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுத்து கொள்ள வேண்டும்.
பின் முட்டையை ஊற்றி அதில் சர்க்கரை ஊற்றி முட்டை பாதி வேகும் வரை கிளறிவிட வேண்டும்.
பின் இடியாப்பம் சேர்த்து மீதமுள்ள தேங்காய் பால் ஊற்றி அதில் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அதில் நெய் சேர்த்து நன்றாக கிண்டி ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் வறுத்த முந்திரி சேர்த்து அலங்கரிக்க வேண்டும்.
அவ்வளவுதான் இனிப்பு இடியாப்பம் தயார்.