காவலருக்கு டேக்கா கொடுத்து காவல் நிலையத்தில் இருந்த தப்பி ஓடிய இளைஞர்.. போலீசில் சிக்கிய சம்பவம்..!
காட்பாடி அடுத்த தாராபடவேடு குளக்கரையைச் சேர்ந்த காமேஷ் என்பவர் கஞ்சா வைத்துள்ளதாக காட்பாடி போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிழுவையில் உள்ள நிலையில், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது திடீரென கைவிலங்குடன் காவல் நிலையத்திலிருந்து காமேஷ் தப்பி ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
முதற்கட்டமாக காவல்நிலையத்திற்கு அருகாமையில் உள்ள சிசிடிவி காட்சிகளில் ஆய்வு மேற்க்கொண்டதில் கமேஷ் கை விலகுடன் தப்பி ஓடியது தெரியவந்தது.
இந்நிலையில்,காமேஷ், காட்பாடி அடுத்த கசம் பகுதியில் உள்ள பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலில் பேரில் விரைந்த போலீசார் காமேஷ் இருக்கும் இடத்தை சுற்றிவளைத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
காவல் நிலையத்தில் இருந்து கைதி விலங்குடன் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.