அரசியலுக்கு வருவாரா விஜய்..? “சாபக்கேடு” என திருமா காட்டம்..!!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.., சினிமாவில் மார்க்கெட் இழக்கும் நேரத்தில் அரசியலுக்கு வந்து விடுகின்றனர். மற்ற மாநிலங்களில் சினிமா பிரபலங்களுக்கு இந்த அளவிற்கு முக்கியதுவம் கொடுக்க படுவதில்லை.
தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படியான சாபக்கேடுகள் எல்லாம் நடக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? இல்லையா..? என்று எனக்கு தெரியாது. ஆனால் அம்பேத்கர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பது, தலைவர்கள் பற்றி படிக்கச் சொல்லுவது, வரவேற்க கூடிய ஒன்று.
தற்போது மீடியா உலகில் அவரை பற்றிய பேச்சு தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பல பேர் அவருக்கு அரசியல் பேனர்களும் வைத்து வருகின்றனர்..,
மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் பேசி வருகிறார். சமூக நீதி சமத்துவம் என்ற சொல்லையே அவர் சொல்ல மறுக்கிறார். அவரை திரும்ப வேண்டும் என்ற குரல் ஒழித்துக்கொண்டு தான் இருக்கிறது.
ஆளுநரின் இந்த செயலை பலரும் எதிர்கின்றார்கள் மதிமுக இதை ஒரு செயல் திட்டமாக மாற்றியுள்ளது. ஆளுநரை திரும்ப பெற குடியரசு தலைவருக்கு கோரிக்கை வைப்பதற்காக 1கோடி கையெழுத்தை பெற மதிமுக தொடங்கியுள்ளது. இந்த செயல் வரவேற்கதக்கது.
இதனை தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் மிகவும் ஆபத்தான ஒருவர் இருக்கிறார். அவர் ஆளுநராக இருப்பது ஏற்றத்தக்கது அல்ல.., மக்கள் அனைவரும் மதிமுகாவின் இந்த செயல் திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
பாஜகவில் அறிவிக்கப்படாத அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றார்கள். என இவ்வாறே செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.