குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..!
குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்று.., ஆனால் தற்போது சில பெற்றோர்களுக்கு அது சவால் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஆரோக்கியமான சில உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
பால் :
பிறந்த முதல் ஆறுமாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறுமாதத்திற்கு பின் தண்ணீர் கலக்காத பாலை நன்கு காய்ச்சி கொடுக்க வேண்டும்.
பழச்சாறு :
6 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தை களுக்கு கட்டாயம் வாரத்திற்கு மூன்று முறையாவது ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை மற்றும் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க வேண்டும்.
ஆறு மாதம் குழந்தைக்கு பழங்களை ஜூஸாக கொடுப்பதை விட நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.
சூப்புகள் (Soup) :
ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கீரை சூப் செய்து கொடுக்க வேண்டும். ஒன்றரை வயதிற்கு மேல் உள்ள குழந்தைக்கு கீரையை நன்கு மசித்து சாப்பாட்டில் பிசைந்து கொடுக்க வேண்டும்.
காய்கறிகள் :
தினமும் ஒரு வேக வைத்த உருளைகிழங்கு, காரட், கீரை ஆகியவற்றை மசித்து ஒரு பின்ச் அளவு உப்பு சேர்த்து கொடுக்க வேண்டும். 8 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
முட்டை :
6 – 7 மாதம் உள்ள குழந்தைகளுக்கு வேக வைத்த முட்டையின் மஞ்சள் கருவின் அரை பகுதியை மட்டும் கொடுக்க வேண்டும். 10 மாதங்களுக்கு பிறகு முழு முட்டையும் கொடுக்கலாம்.
மாமிசம் :
ஒரு வயதிற்கு மேற் பட்ட குழந்தைக்கு மீன் மற்றும் வேக வைத்த சிக்கன் மட்டும் கொடுத்து பழக வேண்டும். இரண்டு வயதிற்கு பின் பொறித்த சிக்கன், மட்டன் கொடுக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post