ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த அதிர்ச்சி..!!
சினிமா துறையில் 20 ஆண்டுகள் வரை எல்லாம் எனக்கு பயணிக்க ஆசையில்லை. 10 படங்கள் எடுத்துவிட்டு சினிமாவில் இருந்து வெளியேற போகிறேன் என இயக்குனர் “லோகேஷ் கனகராஜ்” தெரிவித்துள்ளார். இந்த சொல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகில் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல், இயக்குனராக சாதித்தவர்களில் மிக முக்கியமானவர் “லோகேஷ் கனகராஜ்”. 2017ம் சந்திப் கிஷன் மற்றும் ஸ்ரீ, நடிப்பில் வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலம், தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அறிமுகமாகினார்.
பின் நடிகர் கார்த்திக் வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கினார், ரசிகர்கள் இடையே பெரும் வெற்றியை பெற்றது இத்திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தார்.
முதல் இரண்டு படமும் வெற்றி படமாக கொடுத்த இவர், நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். இதனால் தனக்கென்று ஒரு ரசிகர் படையை சேர்த்தார்.
சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தின் மூலம் திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். நடிகர் கமல், விஜய் சேதுபதி, சூர்யா, ஃபகத் பாசில், இவர்களின் நடிப்பில் வெளியான விக்ரம் படம் 400 கோடியை அள்ளியது.
தற்போது நடிகர் விஜய், த்ரிஷா, கமல் ஹாசன் சூர்யா, விக்ரம், பலரின் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் இத் திரைப்படத்திற்கு தமிழ் திரை உலகமே ஆவலுடம் எதிர் பார்த்துக் கொண்டிருகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் அவர், தற்போது ஒரு பேட்டியில், எனக்கு நிறைய ஆண்டுகள் சினிமாவில் இருக்க ஆசையில்லை 10 வெற்றி படங்கள் கொடுத்தாலே போதும், பின் நான் சினிமாவை விட்டு விலகி விடுவேன் அவர் கூறியிருக்கிறார்.
அவரின் இந்த சொல் தற்போது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post