குழந்தைக்கு வெயில் காலத்திற்க்கு தேவையான உணவுகள்..!
கோடை காலத்தில் உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் போகும், நமக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு சொல்லவ வேணும். இந்த கோடை வெயிலிலும் குழந்தைக்கு தேவையான ஹெல்த் டிப்ஸ்கள்.
கோடைகாலத்தில் குழந்தையின் வயிறு மற்றும் குடல் தான் அதிகம் பாதிப்பு அடையும், அதன் மூலம் குழந்தைக்கு டைபாய்டு, மற்றும் சீதபேதி போன்றவை ஏற்படும். இதை தடுக்க இந்த வகையான உணவுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
* தினமும் ஒரு வெள்ளரிக்காய் எடுத்துக்கொள்ளலாம். வெள்ளரிக்காயில் 96% சதவிகிதம் நீர்ச்சத்து இருப்பதால் வயிற்றுக்கு அதிக குளிர்ச்சி அளிக்கும்.
* கிர்ணிப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், மற்றும் நுங்கு போன்றவை பழங்களை குழந்தைக்கு அதிகம் சாப்பிடக் கொடுக்கலாம்.
* சற்று வெயில் வந்த பின் இளநீர் குடிக்கலாம்.
* கட்டாயம் குழந்தைகளுக்கு தயிர் கொடுக்க வேண்டும்.
* ஒரு நாளைக்கு 3 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.