வைட்டமின்-சி குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள்..!! சரி செய்ய இதை ட்ரை பண்ணுங்க..!!
வைட்டமின்கள் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதில் சில வைட்டமின்கள் குறைந்தாலும் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும். நாளைடைவில் நோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
வைட்டமின் சி குறைப்பாடு இருந்தால் என்ன என்ன விளைவுகள் வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
வைட்டமின் சி குறைபாடு இருந்தால் கண்களில் வலி ஏற்பட ஆரம்பிக்கும். அதை தொடர்ந்து பார்வை மங்கலாக மாற ஆரம்பிக்கும்.
உங்களுக்கு ஏதேனும் சிறிய காயங்கள் ஏற்பட்டால் அது சரியாக நீண்ட நாட்கள் எடுத்தால் அது ரத்தத்தில் உள்ள பிலேட்களில் அளவு குறைவாக இருக்கும். அதற்கு காரணம் வைட்டமின்-சி பற்றாகுறை ஆகும்.
உங்களுக்கு வைட்டமின் சி குறைவாக இருந்தால், நீங்கள் அதிகமாக எரிச்சல் அடையும் மன நிலையில் இருப்பீர்கள். மேலும் எளிதில் கோபமடைபவர்களாக இருக்கலாம்.
உங்களுக்கு தலைமுடி வறட்சியாகவும், வலுவிழந்த நகங்களாகும் இருந்தால் அது வைட்டமின்-சி சத்து இல்லாமல் இருப்பதே காரணம்.
உடலில் உள்ள தசையோ அல்லது மூட்டுகளிலோ வலி ஏற்பட்டால் அதற்கு முக்கிய காரணம் வைட்டமின் சி சத்து குறைபாடு ஆகும்.
அதிகமான சோர்வு உடைவார்களாக நீங்கள் உணர்கிறீர்கள் என்றால் உங்கள் உடலில் வைட்டமின்-சி சத்துக்கள் குறைவாக இருக்கலாம்.
வைட்டமின்-சி சத்து குறைபாட்டால், முக பொலிவு இழந்து வறட்சியான சருமம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆகையால் வைட்டமின் சத்துக்கள் உடலில் சரிவிகிதத்தில் இருப்பதை எப்போதும் உறுதி செய்து கொள்ளவும்.
வைட்டமின்-சி குறைப்பாடுகளை சரி செய்ய வைட்டமின் சி சத்துக்கள் நிறந்த உணவுகள் சிலவற்றை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க
1. ஆரஞ்சு பழம்
2. பப்பாளி பழம்
3. ப்ரோக்கோலி
4. கிவி பழம்
5. கொய்யாப்பழம்
6. தர்பூசணி
7. கொதமல்லி
8. எலுமிச்சை
9. ஸ்ட்ராபெர்ரி
10. அன்னாசி…
மேற்கண்ட உணவுவகைகளை தினமும் ஒன்றாவது நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் அப்படி எடுத்துக்கொள்வதால் வைட்டமின்-சி குறைபாடுகள் இருக்காது. நம் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்..
– கவிப்பிரியா