மழை வெள்ளம் பாதிப்பு..!! இந்த எண்களை அழைக்க மறக்காதீங்க…!!
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது… தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் கனமழை வலுவடைந்துள்ளது. எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்து 3 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னையில் வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க அதிக வாய்ப்புகள் இருப்தாகவும் சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது..
எனவே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசு சில முக்கிய எண்களை மக்களின் பயன்பாட்டிற்காக அறிவித்துள்ளது..
சென்னை மாநகராட்சி – 1913
மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டால் – 9498794987
மெட்ரோ வட்டார் – 1916
பெண்கள் பாதுகாப்பிற்கு – 1091
குழந்தைகள் பாதுகாப்பிற்கு – 1098
விலங்குகள் பாதுகாப்பிற்கு – 044-22200335
அதைபோல் மழை வெள்ளம் பாதிகப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அதை இரண்டு நிமிடம் வீடியோவாக எடுத்து உங்களின் பெயர் மற்றும் நீங்கள் வசிக்கும் பகுதியின் பெயர் போன்றவற்றை 7200166503 இந்த வாட்ஸ் எண்ணிற்கும் அனுப்பலாம்…