நீங்கள் என்றும் இளமையுடன் இருக்க இந்த பொடியை சாப்பிடுங்க..!
பொதுவாக கருவேப்பிலையை நாம் ஒதுக்கி வைத்து தான் சாப்பிடுவோம். ஆனால் கருவேப்பிலையில் ஏராளமான நன்மைகள் , இருக்கும் இதுபோன்று செய்தாள் அனைவரும் சுலபமாக சாப்பிடலாம்.
பலருக்கு இளம் வயதிலே முக சுருக்கம் ஏற்படும், அவற்றை அவற்றை தடுக்க பல விதமான கிரீம்களை பயன்படுத்துவோம். ஆனால் நாம் வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து நம் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.கருவேப்பிளை பொடியை உண்பதன் மூலம் இளமையாக தெரியலாம் .
1. கறிவேப்பிலை
2.பொட்டுக்கடலை
3. துவரம் பருப்பு
4. சீரகம்,
5. மிளகு ,
6.மிளகாய் வத்தல்
7. உப்பு
8.உளுத்தம் பருப்பு
9. பெருங்காயம்
இவற்றை வெறும் கடாயில் ஒவ்வொன்றாக நன்கு வறுத்துக் கொள்ளவும். பருப்புக்களை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.
கருவேப்பிலை மொறு மொருவாகும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்பு இவற்றை பொடியாக அரைத்து வைத்து கொண்டு இதை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசைக்கு பொடி வைத்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வர முகச்சுருக்கம் முடி உதிர்தல் குறையும்.
– நிரோஷா மணிகண்டன்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..