உடல் ஆரோக்கியத்திற்கும் சரும அழகிற்கும் இதை சாப்பிடுங்க..!!
உலர் திராட்சை பொதுவா உடலுக்கு ஆரோக்கியத்திற்கு நல்லது.
இதை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த நீரை குடிக்கும் போது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கொடுக்கின்றன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
ஊட்டச்சத்துக்கள் :
உலர் திராட்சைகளில் வைட்டமின்கள், மினரல்கள், இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
செரிமானம் :
உலர் திராட்சையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.
ஊக்கம் :
திராட்சைகளில் இயற்கையாகவே இனிப்பு இருப்பதால் இழந்து போன எனெர்ஜியை உடனடியாக மீட்டு தர உதவும்.இந்த நீர் உடலுக்கு எனெர்ஜியை கொடுப்பதால் கண்டிப்பாக குடிக்கலாம்.
இதய ஆரோக்கியம் :
உலர் திராட்சைகளில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்.
சரும பராமரிப்பு :
ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் இருப்பதால் உலர் திராட்சை நீரை பருகும் போது வயதாவதை தடுத்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகின்றன
எடை குறைப்பு :
இந்த நீரை குடிப்பதால் வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதாக சொல்லப்படுது. இவை எடை குறைக்கும் முயற்ச்சியில் இருப்பவர்களுக்கு நன்கு உதவும் என்று சொல்லப்படுது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..