சூப்பரான சோயா ரைஸ் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் – 2 கப்
மீல்மேக்கர் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 3
கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு தேவையானது
எண்ணெய் தேவையானது
தாளிக்க…
பட்டை – சிறிய துண்டு
லவங்கம் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கொதி வந்ததும் மீல்மேக்கர், எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது ஊறவைத்து பின் தண்ணீரை பிழிந்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
காய்ந்த மிளகாயை நீரில் ஊறவைத்து பின் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து பின் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் அரைத்த மிளகாய் விழுது, கரம் மசாலா தூள், உப்பு, மீல்மேக்கர் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வடித்த சாதம் சேர்த்து கிளற வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.