சுவையான வட்லாப்பம் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
தேங்காய் பால் 300 மிலி
பால் 200 மிலி
முட்டை 6
சர்க்கரை/வெல்லம் 175 கிராம்
முந்திரி 25 கிராம்
ஏலக்காய் 7
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பால், தேங்காய் பால் மற்றும் இனிப்பு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸியில் ஏலக்காய் மற்றும் முந்திரியை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதை வடிகட்டி சாறு மட்டும் தனியே எடுக்கவும்.
பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த பாத்திரத்தை உயரமாக வைத்து 45 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்.
பின் இதனை ஃபிரிஜ்ஜில் குறைந்தது 1 மணி நேரத்திற்கு வைக்கவும்.
1 மணி நேரத்திற்கு பிறகு வட்லாப்பம் தயார்.