ஐஸ்க்ரீம் , கூல் டிரிங்ஸ் சாப்பிட உடனே சளி பிடிக்கிறதா..? அதை சரி செய்ய தீர்வு இதோ..
ஐஸ்க்ரீம் , கூல் டிரிங்ஸ் போன்ற குளிர் ஊட்டப்பட்ட உணவுகளில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று அதை தயார் செய்யப்பட்ட விதம்.
உதாரணத்திற்கு வெளியிடங்களில் ஜூஸ் குடிக்கின்ற பொழுது அதில் அதிக ஐஸ்கட்டிகள் போட்டு கொடுப்பார்கள். அதை ஒரு பெட்டியில் இருந்து எடுத்து, ஐஸ் கட்டியை உடைத்து, ஜூஸ் போட்டு கொடுத்தாலும்.
அது சுத்தமானதா என்று பார்க்காமல் வாங்கிவிடுகிறோம். அதுவே வீட்டில் தயார் செய்யப்படும் ஃப்ரெஷ் ஜூஸ், உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
ஜூஸில் கலக்கப்படும் தண்ணீர், ஐஸ்கட்டி, போன்றவை சுத்தமானதா என்று பார்க்க வேண்டும். வெளிக்காற்று படும் படி அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். ஐஸ்கட்டியில் தூசுக்கள் மட்டுமின்றி, கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் அதிகமாக இருக்கும்.
தவிர்க்க முடியாத சூழல் என்றால் அதிக குளிர்ச்சியாக இல்லாமல், குறைந்த குளிர்ச்சியில் குடிக்கலாம். சாப்பிடும் பொழுது பொறுமையாக சாப்பிட வேண்டும்.
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், குளிர்ந்த உணவு பொருட்கள் சாப்பிட்டதும் வெந்நீர் குடித்தால் சரியாகி விடும் என்று நினைத்துக்கொண்டு இருப்பார்கள் அது தவறு. வெந்நீர் குடிப்பதால் ரத்த ஓட்டக் குரவையை சரி செய்ய உதவுமே தவிர, முழுவதுமாக சீராக்கி விடாது.
அதிக குளிர் நிறைந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து, குறைந்த குளிர் ஊட்டப்பட்ட உணவு பொருளை சாப்பிடலாம்.
சூடான உணவு பொருட்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். மிளகு ரசம், மிளகு சூப் , குடிப்பதால் தொண்டையை சீராக்கி சளி பிடிக்காமல் தடுக்கும்.
Discussion about this post