குழந்தைக்கு வசம்பு இவ்வளவு பயன் தருகிறதா..?
பொதுவாகவே பிறந்த குழந்தைக்கு வசம்பு கொடுப்பார்கள் அதற்கான காரணம் என்ன தெரியுமா ? தெரிந்து கொள்ள இதை படியுங்கள்..
வசம்பில் காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டுள்ளது. இதனால் உடலின் வெப்பத்தை அதிகரித்து, பசியை உண்டாக்க செய்கிறது. வயிற்று உப்பசம், வயிறு கனமான உணர்வு போன்றவற்றை சரி செய்ய, வசம்பு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
கொடிய விஷமாக இருந்தாலும் அதை முறிக்கும் சக்தி வசம்புவிற்கு இருக்கிறது, வசம்பை பொடி செய்து இரண்டு தேக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டால் தொற்று நோய்கள் அனைத்தும் குணமாகி விடுமாம்.
விஷம் குடித்தவர்களுக்கு வசம்பை மூன்று தேக்கரண்டி அளவிற்கு கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் வெளியே வந்து விடும்.
வசம்பை நெருப்பில் சுட்டு அந்த கறியை தேனில் குழைத்து, குழந்தையின் நாக்கில் தடவி வந்தால், குழந்தைகளுக்கு பேச்சு விரைவில் வந்து விடும்.
பெரும்பாலான பாட்டி வைத்தியத்தில் வசம்பு நண்பனாக இருக்கும். கிராமங்களில் கூட வசம்பை சுட்டு அந்த கறியை பாலில் கலந்து குழந்தைக்கு கொடுப்பார்கள், அப்படி செய்தால் பசியின்மை அதிகரிக்கும். தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.
கொதிக்கும் நீரில் வசம்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை கிருமி நாசினியாக பயன் படுத்தினால். எந்த விதமான நோயும் நெருங்காது.
தேள், பூரான் விஷத்தை முறிக்கவும் உதவுகிறது. இந்த வசம்பு அனைத்து நாட்டு மருந்துகடைகளிலும் கிடைக்கும்.