எதையாவது குழந்தைகள் விழுங்கி விட்டால் பெற்றோர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்…
-
குழந்தைகளுக்கு சிறு பொம்மைகள், பலூன் மற்றும் சின்ன பொருட்களை அவர்கள் கைக்கு எட்டாமல் வைக்க பழகிக்கொள்ளுங்கள்.
-
உங்கள் குழந்தை சின்ன பட்டன் பேட்டரிகளை விழுங்கி விட்டார்கள் எனத் தெரிந்ததும் உடனே விழுங்கிய ஒரு சில மணி நேரங்களில் அதற்குறிய சிகிச்சையை அளிக்க வேண்டும். அப்படி தவறினால் அது பெரும் ஆபத்தாக மாறலாம்.
-
சின்ன குழந்தைகள் எதையாவது முழுங்கியது போல உங்களுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
-
செய்யக்கூடாதவை:
-
நீங்களே குழந்தைக்கு முதலுதவி கொடுத்து விழுங்கிய பொருளை எடுத்து விடலாம் என எதையும் முயற்ச்சிக்க வேண்டாம். அப்படி செய்தால் அது அந்த குழந்தைக்கு மேலும் ஆபத்தை உண்டாக்கும்.
-
கைகளை பயன்படுத்தி குழந்தைக்கு வாந்தி வரவைக்க முயற்சி செய்ய கூடாது, அது இன்னும் மோசமானது.
-
குழந்தை எந்த பொருளையாவது விழுங்கி இருந்தால் அதற்கு அந்த உணவு பொருட்களையும் சாப்பிட தரக்கூடாது.
-
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
