நெல்லை உலுக்கிய ஜெயக்குமார் மரணம்..!! 30 பிரமுகர்களுக்கு சம்மன்..!! சிக்கிய ஆதாரம்..!
திருநெல்வேலி மாவட்டம் கரைச்சுத்து புதூர் பகுதியை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்த இவர். பல்வேறு தொழில்களையும் செய்து வந்துள்ளார்.
தொழிலதிபராக விளங்கி வந்த கேபிகே ஜெயக்குமார் தனசிங், கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால். ஜெயக்குமார் குடும்பத்தினர், உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நேற்று முன்தினம் வீட்டின் பின்னால் உள்ள தென்னந்தோப்பில் ஜெயக்குமார் உடல் பிணமாக கிடைத்துள்ளது..
பின்னர் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்..,
இதையடுத்து ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது கொலை செய்ய பட்டிருப்பாரா..? என்ற நோக்கில் காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர விசாரணையும் மேற்கொண்டுள்ளனர் .
தடயவியல் நிபுணர்கள் மீண்டும் ஜெயக்குமார் தனசிங் பிணமாக கிடந்த தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதையடுத்து, ஜெயக்குமார் தனசிங் வீட்டு பணியாளர்களிடமும் தனித்தனியாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் கணேசன் என்ற பணியாளரை தோட்டத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஜெயக்குமார் தனசிங்கின் செல்போன் மாயமாகி உள்ளதால் அதை தேடும் பணியில் மற்றொரு தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, ஜெயக்குமார் மரணம் அடைந்தது தொடர்பாக 30 பேருக்கு போலீசர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள நபர்களிடம் நேரில் சென்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், கட்சி நிர்வாகிகள் என 30 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயக்குமார் தொலைபேசியில் கடைசியாக பேசிய நபர்கள் உள்ளிட்டோரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இந்த லிஸ்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான கடிதத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய பிரமுகர் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பலரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் தனிப்படை போலீசார் அவர்களை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் சில முக்கிய ஆதரங்கள் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.