மொறு மொறுவென தக்காளி தோசை..!
அன்றாடம் வழக்கமான தோசை சாப்பிட்டு அளுத்துப்போய் இருக்கீங்களா கவலை வேண்டாம், இதோ உங்களுக்காக ஒரு அற்புதமான சுவையில் தக்காளி தோசை செய்து பாருங்க…
தேவையான பொருட்கள்:
- ஒரு டீஸ்பூன் சீரகம்
- ஒரு டீஸ்பூன் மிளகு
- மூன்று தக்காளி
- ஒரு துண்டு இஞ்சி
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- அரைக கப் ரவை
- உப்பு
- அரை கப் அரிசி மாவு
- எண்ணெய்
- அரை கப் கோதுமை மாவு
- கொத்தமல்லி இலை
- ஒரு பெரிய வெங்காயம்
செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், இஞ்சி, மிளகு, மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சேர்த்து அரைத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
- அரைத்த கலவையுடன் ரவை, கோதுமை மாவு, அரிசி மாவு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- இந்த கலவையில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- மாவினை கெட்டியாக கரைக்காமல் சிறிது தண்ணீராக கலந்துக் கொள்ள வேண்டும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசைக்கல் சூடானதும் மாவினை எடுத்து ஊற்றி தோசையின் மேல் நெய் அல்லது எண்ணெய் ஊற்றலாம்.
- மிதமான தீயில் பொன்னிறமாக வேகவைத்து எடுக்க வேண்டும்.
- அவ்வளவுதான் தக்காளி தோசை தயார்.