இது உங்களுக்கு தெரியுமா..?
ஊறுகாய் ஜாடியில் ஊறுகாய் போடும் முன் எண்ணெயை துணியில் நனைத்து ஜாடியில் உட்புறத்தில் தடவி பின் ஊறுகாய் போட்டால் பூஞ்சை பிடிக்காது.
வேப்பம் பூவை நெய்யில் வறுத்து பின் உப்பு சேர்த்து பொடித்து அதனை சாதத்தில் பிசைந்து சாப்பிட காய்ச்சல் வராது.
காராமணியை வெட்டி உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து பின் வெயிலில் காயவைத்து பின் பொரித்து சாப்பிட ருசியாக இருக்கும்.
குலோப் ஜாமூன் பாகு மீந்துபோய்விட்டால், மைதாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து உங்களுக்கு பிடித்த வடிவில் வெட்டி பொரித்து பின் பாகில் சேர்த்து ஊறவைத்தால் மைதா பிஸ்கட் தயார்.
மீந்துபோன இட்லியை உதிர்த்து 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து பின் தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
ரசத்தில் உப்பு அதிகமாகிவிட்டால் டம்ளர் நீர் ஊற்றி மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் அரை பழ எலுமிச்சை சாறு சேர்த்தால் உப்பு குறைந்து விடும்.
கீரை சமைக்கும்போது மூடி போட்டு வேகவைக்க கூடாது. அப்படி செய்தால் நச்சுக்காற்று கீரையிலே தங்கிடும்.
தயிர் மோர் பாத்திரங்களை சுத்தம் செய்து வெயிலில் காயவைத்தால் அதன் வாடை நீங்கிவிடும்.
முட்டைகோஸை நீரில் வேகவைக்காமல் இட்லி பாத்திரத்தின் ஆவியில் வேகவைக்க அதன் சத்தும் அப்படியே கிடைக்கும்.
அஞ்சறை பெட்டியில் 1 வசம்பு போட்டு வைத்தால் அதில் உள்ள பொருட்கள் வீணாகாமல் இருக்கும்.
குருமா செய்தால் அதிகமாக வேணும் என்றால் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து குருமாவில் கலக்கினால் குருமா அதிகமாகும்.