மாநில அரசுக்களை திருடும் பாஜக..!! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!
13 மாநில அரசுகளை கலைக்க பிரதமர் மோடி முயற்சித்து வருவதாகவும், பத்து மாநில அரசுகளை கவிழ்த்து வெற்றி பெற்றுள்ளதாகவும் இது மத்திய அரசின் திருட்டு செயல் என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்
மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு டெல்லியின் முன்னால் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தவர்.. அதன் பின் மக்கள் தன்னை நம்பும் வரை பதவி ஏற்கபோவதில்லை என கூறி தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.. அதன் பின் அக்கட்சியை சேர்ந்த அதிஷி கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதமைச்சராக பதவி ஏற்றார்..
அதன் பின்னர் இன்று நடைபெற்ற சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வரும் பிரதமர் மோடி கடந்த மார்ச் 2016ம் ஆண்டு முதல் மார்ச் 2024ம் ஆண்டு வரையில் மட்டும் கூட்டணியில் இல்லாத 13 மாநில அரசுகளை கவிழ்க்க முயற்சி செய்தார்.
அதில் 10 மாநில அரசுகளை கவிழ்து வெற்றி பெற்றார். எதிர்க்கட்சியை ஆளும் மாநிலங்களில் அதாவது பாஜகவிற்கு எதிராக செயல்படும் கட்சி மீதும் கட்சியின் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் போன்றவற்றை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. அஜித் பவார், பிரதாப் சர்நாயக் மற்றும் ஹசன் முஹ்ரிப் போன்ற மஹாராஷ்டிர அரசியல்வாதிகள் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகு சாலைகளை சீரமைக்கலாம் என்றும் தெரிவித்தார். மோடி, அமித்ஷாவால் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் பாஜகவில் இணைக்கப்படுவதாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதியதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்
ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தங்களது இயக்கத்திற்காக ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணித்த நிலையில் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை நினைத்து தான் பரிதாபப்படுவதாக கடிதத்தில் குறிப்பிட்டதாக கூறினார்.. 13 மாநில அரசுகளை கலைக்க பிரதமர் மோடி முயற்சித்து, பத்து மாநில அரசுகளை கவிழ்த்து வெற்றி பெற்றுள்ளார்.. இது மத்திய அரசின் திருட்டு என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்..
இதுபோன்ற செயலுக்கு பாஜகவினர் கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லை என கூறினார்.. ஆம் ஆத்மி அரசு கட்டிகொடுத்துள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை போல பாஜக அரசால் கட்ட முடியுமா..? முடியாது.. பாஜகவை பொறுத்த வரையில் மக்கள் அதிகம் நம்பிக்கை வைக்கும் அரசியல் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., மூலம் போலி வழக்குகளை பதிவு செய்வார்கள் என இவ்வாறே அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..