தெருவில் உங்க வீட்டு சாம்பார் கமகமக்கனுமா..? வாங்க பார்க்கலாம்..!
மிக்ஸி ஜாரின் பிளேடு ஷார்பாக மாற்ற இரண்டு ஐஸ் கட்டி மற்றும் ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து அரைத்தால் மாறும்.
முட்டை குழம்பில் தேங்காய் துருவல் மற்ற்றும் சோம்பு சேர்த்து அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாகும்.
வெங்காயம் மற்றும் பூண்டை வதக்கும்போது முதலில் வெங்காயம் வதக்க வேண்டும் பின் பூண்டு சேர்த்து வதக்கவும்.
உருளைக்கிழங்கு வாங்கும்போது முளை விட்டது, பச்சை நிறம் உள்ளது, வெட்டு விழுந்தவை, புள்ளிகள் விட்டதை தவிர்க்க வேண்டும்.
சப்பாத்தி மாவில் சுக்குபொடி அல்லது ஓமத்தூளை சேர்த்து பிசைந்து சுட்டால் ஜீரணம் எளிதாகும்.
சமையல் அறையின் அலமாரிகளை 15 நாட்களுக்கு ஒரு முறையேனும் சுத்தம் செய்தல் வேண்டும்.
காபித்தூளை காற்று போகாத டப்பாவில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைத்தால் அதன் மனம் குறையாது.
நெய் காய்ச்சி இறக்கும் சமையத்தில் அரை ஸ்பூன் தயிர் சேர்த்து இறக்கினால் நெய் நல்ல வாசனையாக இருக்கும்.
கீரைகள் மற்றும் காய்கறிகளை வேகவைக்கும்போது அதில் சிறிது சோடா மாவு கலந்து வேகவைத்தால் அதன் நிறம் மாறாது.
சாம்பார் கொதிக்கும்போது அதில் அரை ஸ்பூன் வெந்தயப்பொடி சேர்த்து கிளறினால் நல்ல வாசனையாக இருக்கும்.