சிம்பலான தக்காளி சாதம் இன்னிக்கு செய்யலாமா..!
- நான்கு தக்காளி
- கறிவேப்பிலை
- உப்பு
- மஞ்சள் தூள்
- சிக்கன் மசாலா
- இரண்டு கிராம்பு
- இஞ்சி பூண்டு விழுது
- மூன்று பட்டை
- வடித்த சாதம்
- எண்ணெய்
ஒரு மிக்ஸியில் கிராம்பு, பட்டை, இஞ்சி பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த பொடி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின் அதனுடன் அரைத்த தக்காளியை சேர்த்து சிறிது மஞ்சள்தூள்,சிக்கன் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி வதங்கியதும் உப்பு சேர்த்து வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.
அவ்ளோதான் சிம்பலான தக்காளி சாதம் தயார். இத்துடன் உருளைக்கிழங்கு பொரியல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
