சிக்கன் ஸ்கல்லோபினி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு 1/2 கப்
வெண்ணெய் 1/4 கப்
பூண்டு நறுக்கியது
சிக்கன் எலும்பு மற்றும் தோல் நீக்கியது 2
உப்பு
மிளகு தூள்
காளான் நறுக்கியது
வெள்ளை ஒயின் 1/4 கப்
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மாவினை சேர்த்து அதில் வெண்ணெய் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து அனைத்தும் ஒன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
சிக்கன் துண்டுகளை மெல்லியதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின் சிக்கனை அதில் முக்கி தனியே வைக்கவும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் பூண்டு சேர்த்து மிதமான தீயில் வைத்து உருகியதும் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து உப்பு போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து பின் மிளகுதூள் தூவி தனியே எடுத்து ஆறவைக்க வேண்டும்.
அதே ஃபேனில் காளானை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதில் ஒயின், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
வறுத்த சிக்கன் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் இந்த காளான் கலவையை ஊற்றி அலங்கரிக்க வேண்டும்.
அவ்வளவுதான் சிக்கன் ஸ்கல்லோபினி தயார்.