பிள்ளையார் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
- பச்சைப்பயறு – 1 கப்
- வெல்லம் பவுடர் – 1 கப்
- தேங்காய் துருவல் – 1 கப்
- சுக்கு தூள் – 1/4 டீஸ்பூன்
- ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
- உப்பு – 1 சிட்டிகை
- நெய் – 1/2 டீஸ்பூன்
- அரிசி மாவு – 1 கப்
- தண்ணீர் – 2 கப்
- உப்பு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
பச்சை பயிறை நீரில் சுத்தம் செய்து 3 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பின் அதனை ஒரு குக்கரில் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனில் பச்சை பயிறை மாற்றி அதில் வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின் அதில் அரை ஸ்பூன் ஏலக்காய்த்தூள், அரை ஸ்பூன் சுக்கு பொடி, அரை சிட்டிகை உப்பு சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்போது கொழுக்கட்டை பூரணம் தயாராகி விட்டது.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்து அதில் உப்பு போட்டு சூடான நீரை ஊற்றி கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவினை உருண்டைகளாக பிடித்துக் கொண்டு அதனை கொழுக்கட்டை வடிவில் செய்து அதில் தயாரித்த பூரணத்தை வைத்து தயாரித்து வைக்க வேண்டும்.
இட்லி பாத்திரத்தில் சிறிது நீர் சேர்த்து சூடானதும் அந்த தட்டில் துணியை வைத்து அதன் மேல் தயாரித்த கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான கொழுக்கட்டை தயாராகி விட்டது.
வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு இப்படி கொழுக்கட்டை செய்து பாருங்க…