முறையான தகவல் அளிக்காமல் பாகிஸ்தான் பெண்ணை மணமுடித்த இந்திய சி.ஆர்.பி.எப் பாதுகாப்புக்கடை வீரர் பணியில் இருந்து அதிரடியாகப டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
சி.ஆர்.பி.எப் என்று அழைக்கப்படும் துணை ராணுவப்படையினர்தான் உள்நாட்டில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கிறார்கள். நக்ஸல்களை ஒழிப்பது, தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுவதுதான் இவர்களின் முக்கிய பணி ஆகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, அசாம் ரைஃபிள்ஸ், தேசிய பாதுகாப்புப் படை, இந்திய-திபெத்திய எல்லைப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை என்று இவற்றின் எண்ணிக்கையும் அதிகம். விமான நிலையங்கள், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் உள்பட பலவற்றையும் பாதுகாக்கும் இவர்களுடைய மொத்த எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் மேல்.
இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் உள்ளனர். இவர்களைளயும் கணக்கில் சேர்ந்தால் மொத்தம் 24 லட்சம் பேர் பணியில் உள்ளனர். இந்த நிலையில்தான், சி.ஆர்.பி.எப் படையில் ஒருஐ அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்வது குறித்து அரசுக்கு முறையான தகவல் தெரிவிக்காத சி.ஆர்.பி.எப் வீரர் அதிரடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சி.ஆர்.பி.எப்பில் பேபால் அருகேயுள்ள பங்கராசியாவில் 41வது பட்டாலியனில் முனீர் அகமது என்பவர் பணி புரிந்து வந்தார். இவர் பாகிஸ்தானை சேர்ந்த மெனல் பேகம் என்ற பெண்ணை கடந்த 2024 மே மாதத்தில்ர மணமுடித்துள்ளார். சி.ஆர்.பி.எப் அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பெண்ணை மணமுடிப்பது குறித்து முனீர் அகமது முறையான தகவல் அளிக்கவில்லை.
சமீபத்தில் பஹால்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களை வெளியே செல்ல இந்திய அரசு உத்தரவிட்டது. அப்போது, மெனல் பேகத்தின் விசாவை ஆய்வு செய்த போது, அவர் விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் நாட்டவருடனான திருமணத்தை மறைத்ததற்காகவும், விசாவின் முடிந்த பிறகும் மெனல் பேகத்தை இந்தியாவில் தங்க வைத்ததாகவும் முனீர் மீது சி.ஆர்.பி.எப் குற்றம் சாட்டியுள்ளது. தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒருவரை விதியை மீறியதால் எந்த விதமான முறையான விசாரணையும் செய்யப்படாமல் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சிஆர்பிஎப் செய்தித் தொடர்பாளர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) எம்.தினகரன் தெரிவித்துள்ளார்.

















