உயரம் என்பது நம்மில் பலருக்கும் தன்னம்பிக்கை, கம்பீரம் மற்றும் தனிப்பட்ட அழகைக் கொடுக்கும் ஒரு விஷயம். சிலர் தன்னை விட உயரமானவரைப் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகவோ அல்லது தாழ்வாகவோ உணர்கிறார்கள். பொதுவாகவே 18 வயது முதல் 20 வயதில் நம் உயரம் வளர்ச்சி ஆனது நின்றுவிடும். 20 வயதிற்கு பிறகு உயரமாக முடியாது என்று கூறுவார்கள். How to increase child height
இருந்தாலும், நம் குழந்தைகள் உடலுக்குத் தேவையான அதிக சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட குழந்தைகள் உடலில் உள்ள ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. எனவே இதன் மூலம் நம் குழந்தைகள் உயரத்திற்கு சில அங்குலங்கள் சேர்க்கலாம். How to increase child height
கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ், அயோடின், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால் உயரமாக வளரலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது தவிர இயற்கை முறையில் குழந்தைகள் உயரத்தை அதிகரிப்பது என்பதையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உயரம் அதிகரிக்க உதவும் உணவுகள்:
தினசரி உணவில் கேரட், முட்டையின் மஞ்சள் கரு, மீன், இறைச்சி, உருளைக்கிழங்கு, பருப்புகள், பாதாம், வேர்க்கடலை, கோழி, பீன்ஸ், பழங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் இருக்க வேண்டும். இந்த உணவுகள் குழந்தைகள் உயரத்தை சில இன்ச் வரை அதிகரிக்க உதவும்.
கால்சியம்: How to increase child height
எலும்புகள் வலுவாக இல்லாவிட்டாலும் உயரம் ஆக முடியாது. குழந்தைகள் எலும்புகள் வலுவாக இருந்தால் மட்டுமே உயரமாக வளர முடியும். எனவே, வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. எனவே கால்சியம் அதிகம் நிறைந்துள்ள உணவு பொருட்களான பால், முட்டை, மீன், மஷ்ரூம், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பால் சார்ந்த பொருட்களை குழந்தைகள் உனவில் சேர்க்கவேண்டும்.
தண்ணீர்: How to increase child height
தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது, மேலும் எலும்பு வளர்ச்சியை ஆதரிக்கிறது. இதனால் உங்கள் குழந்தைகள் உயரத்தை நீங்கள் அதிகரிக்கலாம்.
முளைகட்டிய தானியம்:
குழந்தைகள் உணவில் சேர்த்துக் கொள்ள முழு தானியங்களை விட முளைத்த தானியங்கள் சிறந்தது. முளைத்த தானியங்களில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இந்த புரதம் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இது உயரத்தையும் கூட்டுகிறது.
யோகாசனம்: How to increase child height
யோகா மூலம் உயரத்தை அதிகரிக்க சிறு வயதிலேயே பயிற்சி செய்ய துவங்கினால் குழந்தைகள் உயரமாக வளர பெரிதும் உதவும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் நம் உடலில் உள்ள வளர்ச்சி ஹார்மோனை பாதிக்கும். ஆனால் நீங்கள் யோகா பயிற்சி செய்யும் போது, நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு உள் அமைதியைப் பெறுவீர்கள். யோகா பயிற்சி செய்வது தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தி உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இளமையில் ஓடுவதையும், விளையாடுவதையும் விட்டுவிட்டு, தொடர்ந்து உடலுழைப்பு இல்லாத வேலைகளில் ஈடுபடுவது உடல் சோம்பலுக்கு வழிவகுக்கும். இதனால் நாம் ஒரு சாய்ந்த நிலையில் கூன் போட்டு உட்காருவோம். இது நம் எலும்பு வளர்ச்சியைத் தடுத்து வளர்ச்சியைத் தடுக்கிறது.
வைட்டமின் டி:
சூரிய ஒளியில் இருந்து நமது உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. இந்த வைட்டமின் டி நம் எலும்பு வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காலை 8 மணிக்கு முன் இருக்கும் சூரிய ஒளி உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஸ்கிப்பிங்:
ஸ்கிப்பிங் செய்வது உங்கள் குழந்தைகள் உயரத்தை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். ஒரு நாளைக்கு 30 – 50 முறை ஸ்கிப்பிங் குதிப்பது உயரமாக வளரவும் குழந்தைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழி. இது எடை இழப்புக்கும் உதவுகிறது. ஆனால் 30 வயதை தாண்டிய பெண்கள் ஸ்கிப்பிங் செய்வது கருப்பை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.