ஆடி முதல் நாளுக்கு இந்த ‘கருப்பு உளுத்தம் பருப்பு வடை’ செய்து படைங்க…!
கருப்பு உளுத்தம் பருப்பு 1 கப்
பச்சரிசி கால் கப்
இஞ்சி 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
உப்பு தேவையானது
தண்ணீர்
வெங்காயம் அரை நறுக்கியது
மிளகுத்தூள் 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் தேவையானது
பச்சரிசி மற்றும் உளுந்தை சுத்தம் செய்து ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சரிசி,கருப்பு உளுந்து,இஞ்சி,மிளகாய்,உப்பு மற்றும் சிறிது நீர் தெளித்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் மாற்றி வெங்காயம்,மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.
இரண்டு கைகளிலும் நீர் தடவி மாவு எடுத்து வடை தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான கருப்பு உளுத்தம் பருப்பு வடை தயார்.
