காணமல் போன 3 மாணவிகள்..! சிக்கிய கடிதம்..! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
பல்லடம் அருகே தனியார் பள்ளியில் பயின்று வரும் மூன்று பள்ளி மாணவிகள் மாயம்-பெற்றோர்களின் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் தரணி தேவி, மற்றும் மோகனப்பிரியா, அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் கௌசல்யா, ஆகியோர் ஒரே பள்ளியில் பயின்று வரும் நிலையில் கடந்த ஜூலை 15ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வீட்டிற்கு வராததால் அச்சம் அடைந்த பெற்றோர்.
பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர்.., மாணவர்கள் புறப்பட்டு விட்டதாக பள்ளியில் தெரிவித்ததால் மேலும் அச்சமடைந்த பெற்றோர்கள் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காணாமல் போன மூன்று மாணவிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு தொடர்பு எண்களையும் வெளியிட்டுள்ளனர்.
அதன் பின் மாணவியின் வீட்டிற்கு நடவடிக்கை மேற்கொண்ட போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.., அதாவது மாணவிகளின் வீட்டில் விசாரணை நடத்திய போது ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அதில் மாணவி “என்னை யாரும் தேட வேண்டாம் என்றும் நான் சென்னைக்கு சென்னைக்கு செல்வதாகவும் கடிதம் எழுதி வைத்துள்ளார்”.
அதன் அடிப்படையில் மாணவிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது சகோதரி மற்றும் தோழியுடன் பத்தாம் வகுப்பு படித்த மாணவி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ